திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு இன்று முதல் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழக தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா கொடியசைத்து இந்த சேவையை தொடங்கி வைத்தார். மன்னார்குடியில் இருந்து விரைவில் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மன்னார்குடி நகர மன்ற தலைவர் மண்ணை சோழராஜன், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.