மன்னார்குடி மேலப்பாலம் அருகே கும்பகோணம் சாலையில் கண்ணையாநகர், டி. கே. எஸ் நகர், லட்சுமிகிருஷ்ணா நகர் பகுதிகளில் வசிக்கும் 150 குடும்பங்கள், பாமனி ஆற்றங்கரையில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் குப்பைகளைக் கொட்டுவதால் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணக் கோரி, இன்று அப்பகுதி மக்கள் சாலையில் குப்பைகளைக் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.