மன்னார்குடியில் மருந்தகங்கள் மூடல்

449பார்த்தது
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் இன்று (மே 20) நாடு தழுவிய ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நாடு முழுவதும் சுமார் 12.4 லட்சம் மருந்தகங்கள் மூடப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள 76 மருந்தகங்களும், கூத்தாநல்லூர், நீடாமங்கலம், உள்ளிக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மருந்தகங்கள் மூடப்பட்டு போராட்டத்தில் பங்கேற்றன.

தொடர்புடைய செய்தி