தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி. ஆர். பாண்டியன், மேகதாட்டு அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்தவும், ராசி மணலில் அணை கட்டுவதற்கு ஒத்த கருத்தை ஆணையம் உருவாக்கவும் வலியுறுத்தி, வரும் ஏழாம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். திருவாரூரில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என்றும், காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 18,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.