கருவாக்குறிச்சியில் வருமுன் காப்போம் திட்ட விழா

73பார்த்தது
கருவாக்குறிச்சியில் வருமுன் காப்போம் திட்ட விழா
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த முக்குளம் சாத்தனூர் ஊராட்சி கருவாக்குறிச்சி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமை நீடாமங்கலம் ஒன்றிய குழு தலைவர் சோம செந்தமிழ் செல்வன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில், மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டகுழு தலைவர் பாலு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு மருந்துப்பெட்டகம் மற்றும் மருத்துவக் காப்பீடு அட்டைகளை வழங்கி பேசினார். 

500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ முகாம் மூலம் பயனடைந்தனர். கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, குடல் நோய், குழந்தைகள் நல மருத்துவம் போன்றவைகளுக்கு சிறப்பு மருத்துவர்களால் முதல்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கருவாக்குறிச்சி கிராமத்தில் நேற்று நடந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்தனர். 

நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், ஒன்றிய குழு துணைத்தலைவர் ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் சங்கீதா செல்வேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் பாரதிமோகன், ஊராட்சி மன்றத் தலைவர் வீராதேசபந்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you