மன்னார்குடி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எஸ். காமராஜ், தேர்தல் பணியில் ஈடுபட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் தனியார் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அவர், மன்னார்குடி தொகுதி பல்வேறு திட்டங்களில் முன்னுதாரணமாக திகழ்வதாகவும், மக்களுக்கான பணியில் அனைவரும் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், இனி அரசியல் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு நண்பர்களாக இருப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.