புதுச்சேரி அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர்

0பார்த்தது
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்த கலைஅமுதன் (60) என்பவருக்கு பாண்டிச்சேரி என். ஆர். காங்கிரஸ் அமைச்சர் திருமுருகன் (50) தொழில்முறை கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வழங்கியதாகக் கூறப்படும் 41 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பியதால், செக் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 04.08.2025 அன்று நீடாமங்கலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், 03.12.2025 அன்று அமைச்சர் திருமுருகனுக்கு நீதிமன்றம் பிடிவாரன் பிறப்பித்தது. இதையடுத்து, 09.01.2026 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி