திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் 6 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட 10 உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ. 6 லட்சத்து 41 ஆயிரத்து 516 ரொக்கம், 26 கிராம் தங்கம், 157 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை எண்ணப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறை நாகை மண்டல துணை ஆணையர் பா. ராணி மற்றும் கோவில் செயல் அலுவலர் எஸ். மாதவன் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறப்பு மற்றும் எண்ணும் பணி நடைபெற்றது.