இந்துமதத்தினர் சீர்வரிசை எடுத்து வந்த மதநல்லிணக்க நிகழ்ச்சி

0பார்த்தது
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த உமர் பின் கத்தாப் பள்ளிவாசல், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு நாளை திறப்பு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, பள்ளிவாசலைச் சுற்றியுள்ள ஆய்க்குடி, அகரபொதக்குடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் மேளதாளங்களுடன் 150 தட்டுகளில் பூ, பழங்கள், இனிப்புகள், வாழைத்தார்கள் உள்ளிட்ட சீர்வரிசைகளை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் முக்கிய வீதிகள் வழியாக நடந்து வந்து பள்ளிவாசல் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். தாய்மாமன் சீர் போல் கொண்டுவரப்பட்ட இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்கள் சீர்வரிசை கொண்டு வந்த இந்து பொதுமக்களை அன்புடன் வரவேற்று, கூல்டிரிங்ஸ் கொடுத்து, பள்ளிவாசலில் வைத்து மரியாதை செய்தனர்.

தொடர்புடைய செய்தி