திருத்துறைப்பூண்டி மரைக்காகோரையாற்றில் 22 கிலோமீட்டர் தொலைவிற்கு ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் சேவைக்கான ஆலோசனைக்கூட்டம் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு தலைமையில் நடைபெற்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஜூன் 6-ந் தேதி திருத்துறைப்பூண்டி அடுத்த ஓவர்குடி மரைக்காகோரையாற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.