மன்னார்குடியை சேர்ந்த குணசேகரன், அவரது மகன் ஆனந்த் மற்றும் நாவல்பூண்டியை சேர்ந்த வாணிதாசன் ஆகியோர் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் உடனடியாக வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, கலைமணி என்பவர் ₹22 லட்சத்து 9 ஆயிரம், விக்னேஷ் ₹5 லட்சத்து 4 ஆயிரம், தினேஷ் ₹4 லட்சம், சரத்குமார் ₹5 லட்சத்து 10 ஆயிரம், சபரீசன் ₹4 லட்சத்து 15 ஆயிரம் என மொத்தம் ₹40 லட்சத்து 38 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு, வாக்குறுதி அளித்தபடி வெளிநாட்டில் வேலை வாங்கித் தரவில்லை என கூறப்படுகிறது. பலமுறை கேட்டும் காலம் தாழ்த்தியதால், மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் கலைமணி புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாணிதாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான குணசேகரன் மற்றும் அவரது மகன் ஆனந்த் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.