தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நெல் கொள்முதல் நிலையங்களில் 2 கிலோ வரை கூடுதல் எடை வைத்து கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படும் தகவல் அதிர்ச்சியளிப்பதாகவும், இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், மத்திய அரசு அமெரிக்காவுடன் செய்துள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்திய வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு அமெரிக்கா 18% இறக்குமதி வரி விதிக்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது இந்திய விவசாயிகளை அழிவுப் பாதைக்குத் தள்ளும் என்றும் அவர் குற்றம் சாட்டினார். எனவே, இந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரி, நாடு முழுவதும் கிராமங்களில் வர்த்தக ஒப்பந்த நகல்களைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.