மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக அரசு கல்லூரி மாணவர்களும் இன்று கல்லூரி வாயில் கதவுகளை பூட்டி பேராசிரியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.