திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களை வெள்ளம் பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும், நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.