தமிழக வெற்றிக்கழகத்தின் திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளர் யு. வி. எம் ராஜராஜன் மீது, பரமக்குடியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஜெயராமன், நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து, ஜெயராமன் மீது தவெகவினர் மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.