அரசினர் பெண்கள் கல்லூரியை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

181பார்த்தது
மன்னார்குடியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த இருபாலர் அரசு கலைக்கல்லூரிக்கு மாற்றாக, தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜாவின் முயற்சியால் மகளிருக்கென தனி அரசு கலைக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, தஞ்சை சாலையில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவன கட்டிடத்தில் புதிய கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கல்லூரியை துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று வகுப்புகளை தொடங்கி வைத்தனர். வரலாற்று துறை, கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல், நுண்ணுயிரியல், கணினி பயன்பாட்டு துறை ஆகியவை முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி