திருவாரூர்: ஆரம்ப சுகாதார நிலைய மேற்கூரை இடிந்து ஒருவர் காயம்

0பார்த்தது
திருவாரூர்: ஆரம்ப சுகாதார நிலைய மேற்கூரை இடிந்து ஒருவர் காயம்
விளக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் 60 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கட்டிடம் சேதமடைந்து, மேற்கூரையில் இருந்து சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில், பரிசோதனைக்காக காத்திருந்த நிறைமாத கர்ப்பிணியின் கணவர் அறிவழகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக கர்ப்பிணி மல்லீஸ்வரி, அருகில் இருந்தோர் காயமின்றி தப்பினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you