திருவாரூா்: மருத்துவமனை பிணவறையில் எலி கடித்த உடல்

354பார்த்தது
திருவாரூா்: மருத்துவமனை பிணவறையில் எலி கடித்த உடல்
திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த கோவிந்தராஜ் (55) என்பவரின் உடல் எலி கடித்து குதறிய நிலையில் காணப்பட்டதால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திங்கள் மாலை உயிரிழந்த கோவிந்தராஜின் உடல், உடற்கூறாய்வுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, உடலில் பல பாகங்கள் எலி கடித்து எலும்புகள் வெளியே தெரிந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்டபோது பிணவறை ஊழியர்கள் உரிய பதில் அளிக்காததால், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி