திருவாரூர்: இருசக்கர வாகனம் திருட்டு

368பார்த்தது
திருவாரூர்: இருசக்கர வாகனம் திருட்டு
நாகை மாவட்டம், கோட்டூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முஹம்மது பஷீர் (32) என்பவர், கூத்தாநல்லூர் சிஸ்தி நகரில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். இரவு வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த அவரது வாகனம் காலையில் காணாமல் போனது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் முகமூடி அணிந்த ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி