திருவாரூர்: கணவர் பிணையில் வருவதற்கு போலி ஆவணம் சமர்ப்பித்த பெண்

441பார்த்தது
திருவாரூர்: கணவர் பிணையில் வருவதற்கு போலி ஆவணம் சமர்ப்பித்த பெண்
திருச்சி மாவட்டம், நாவல்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமு (40) மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் மன்னார்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி பவித்ரா (30) மற்றும் தோழி மலர்விழி (37) ஆகியோர் ராமு ஜாமீனில் வெளிவர, போலி ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளனர். மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழ்முருகன் இதை கண்டறிந்து, தலைமை எழுத்தர் சிந்து அளித்த புகாரின் பேரில், பவித்ரா மற்றும் மலர்விழி கைது செய்யப்பட்டு திருவாரூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி