திருவாரூர் அருகே திருப்பள்ளிமுக்கூடல் கிராமத்தில் விக்னேஷ் (23), மதிவாணன் (22) மற்றும் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் ஆகியோர் நேற்று முன்தினம் போதையில் அரிவாளுடன் சாலையில் நின்று பொதுமக்களை ஆபாச வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.