திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவருடன் பணியில் இருந்த மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.