திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக லேசான மழை பெய்து வருவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மன்னார்குடி, பாமனி, காரிகோட்டை, சவளக்காரன், இரட்டைப்புலி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.