வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு மன்னார்குடியில் உதய கருட விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ராஜகோபால சுவாமி கோவில் மற்றும் கோபிநாத பெருமாள் கோவில்களில் இருந்து இரண்டு கருட வாகனங்களில் சுவாமிகள் வீதி உலா வந்தனர். பாமணி ஆற்றங்கரையில் இரு சுவாமிகளும் ஒன்றாக பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்வில் மகாதிபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.