திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் மின் கம்பம் அமைக்கும் பணிகளின் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் வீணாகி, சாலைகளில் மழை நீர் போல் தேங்கி நிற்கிறது. இந்த அவல நிலையை உடனடியாக சரி செய்யுமாறு மன்னார்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.