திருவாரூர் மாவட்டம் கட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த மீனா, கணவர் பாண்டியனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மன்னார்குடி அருகே மேலவாசல் என்ற இடத்தில் தஞ்சை நோக்கிச் சென்ற பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் மீனா பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பாண்டியன் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பேருந்து ஓட்டுநர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.