இலவச மருத்துவம் மூலம் 300 பேர் நலம் பெற்று சென்றனர்

131பார்த்தது
திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் சூர்யா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதயம் மற்றும் பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. குடவாசல் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதிராமன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பங்கேற்றவர்களுக்கு இலவசமாக இசிஜி மற்றும் எக்கோ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். சிபிஎம் கட்சி முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உதுமான் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.