நீடாமங்கலம் அருகே நகா் கிராமத்தில் செல்லும் இருவழிச்சாலை பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அதிவேகமாக வந்த காரை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா். காரில் இருந்தவா்களிடம் விசாரித்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினா். போலீஸாரின் விசாரணையில் ஒருவா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த முகேஷ்குமாா் என்பதும் மற்றொருவா் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த சோமாபாய் என்பதும் தெரியவந்தது. பின்னர் காரை பரிசோதித்த போலீசார் அரசால் தடை செய்யப்பட்ட 320 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.