கபடி வீரர் வீட்டிற்கு சென்று வாழ்த்துதெரிவித்த பைசன் பட ஹீரோ

0பார்த்தது
கடந்த மாதம் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வடுவூரைச் சேர்ந்த அபினேஷை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். அவரது சொந்த ஊரான வடுவூரில் அபினேஷுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' பட புகழ் நடிகர் துரு, கபடி வீரர் அபினேஷை நேரில் சந்தித்து கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும், வடுவூரில் உள்ள உள் விளையாட்டு அரங்கையும் பார்வையிட்டு, அங்குள்ள விளையாட்டு வீரர்களுடன் உரையாடி மகிழ்ந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி