குடவாசல் அருகே சேங்காலிபுரத்தைச் சேர்ந்த திருமுகம் (45) என்பவர், செங்கல் சூளையில் மேஸ்திரியாகப் பணிபுரிந்து வந்தார். இன்று அ
திகாலை, வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 4 பேர், திருமுகத்தை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை கைது செய்யக் கோரி திருமுகத்தின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.