மேகதாட்டு அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்திடவும், ராசி மணலில் அணை கட்டுவதற்கு ஒத்த கருத்தை ஆணையம் உருவாக்கிடவும் வலியுறுத்தி, வரும் ஏழாம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்கள் தழுவிய அளவில் திருவாரூரில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி. ஆர். பாண்டியன் தெரிவித்தார். மன்னார்குடியில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.