திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எட மேலையூர் கிராமத்தில் இன்று முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் அழகு திருநாவுக்கரசு சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, சிலையை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டிஆர்பி. ராஜா, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.