திருவாரூர் மாவட்டம் செம்மங்குடியில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற நலம் காக்கும் மருத்துவ முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு நோய்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சைகளை பெற்றனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் இந்த முகாமை நேரில் பார்வையிட்டு, பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களிடம் முகாம் குறித்து கேட்டறிந்தார். முகாமில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியரும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.