திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 2024-2025 ஆம் கல்வி ஆண்டு பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி தங்கப்பதக்கங்களை வழங்கினார். இதில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி மாணவிகள் காவேரி, எஸ்ரா, ஹப்சரா, சனோபர்அரீனா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.