பேரையூர் அரசு பள்ளி நேற்று 'கல்வியே எங்கள் இலக்கு' என்ற தலைப்பில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தியது. தலைமை ஆசிரியர் தயாளன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துறை. செந்தில்குமார் மற்றும் ராமதாஸ் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தமிழ், ஆங்கிலம், கணிதம், உடற்கல்வி, அறிவியல் போன்ற துறைகளில் உள்ள உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து முதல்நிலை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கினர்.