மன்னார்குடியில் மூன்றாவது நாளாக லாரிகள் இயக்கப்படவில்லை

2பார்த்தது
மத்திய அரசு லாரிகளுக்கான தகுதி சான்றிதழ் கட்டணத்தை 750 ரூபாயில் இருந்து 28 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியதை திரும்பப் பெற வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் கடந்த இரண்டு தினங்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கவில்லை. இதன் காரணமாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் எடுத்துச் செல்லும் பணி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மூன்றாவது நாளாக மன்னார்குடியில் லாரிகள் இயக்கப்படவில்லை.