பேரளத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தியவர் கைது

1பார்த்தது
பேரளத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தியவர் கைது
நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட 150 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய நான்குசக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பாராட்டினார். பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் கஞ்சா, குட்கா, மது விற்பனை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி