திருவாரூர்: போக்சேவில் தாய்மாமன் கைது

73பார்த்தது
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே சிறுமியை கர்ப்பம் ஆக்கிய தாய் மாமன் போக்சோவில் கைது செய்யப்பட்டார். 

நன்னிலம் அருகே உள்ள அச்சுதமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அருகே உள்ள ஜே.ஜே. காலனி பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய தாய் மாமன் மணிகண்டன் வீட்டிற்கு சிறுமி சென்றுள்ளார். 

அப்போது மணிகண்டன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த நிலையில், மணிகண்டன் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியுடன் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கர்ப்பமான சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். 

இதனை அடுத்து சிறுமி நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நன்னிலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமியின் தாய் மாமன் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு செய்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி