முத்துப்பேட்டையில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், இஸ்லாமியர்கள் ஏராளமானோர் சீர்வரிசையை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இந்த விழாவில் பங்கேற்ற திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மற்றும் தமிழக அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் இந்த ஒற்றுமையைப் பாராட்டினர். இப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பதட்டமான சூழலில் நடைபெற்றாலும், இந்த குடமுழுக்கு விழா அமைதியான முறையில் நடைபெற்றது.