நீடாமங்கலம்: மனைவியை கத்தியால் குத்த முயன்ற கணவன் கைது

4பார்த்தது
நீடாமங்கலம்: மனைவியை கத்தியால் குத்த முயன்ற கணவன் கைது
நீடாமங்கலம் நீதிமன்ற வளாகத்தில், மதுபோதையில், கூலித்தொழிலாளி அரிகிருஷ்ணன் (60), கத்தியால் மனைவியை குத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த மனைவி செல்வியிடம் (55) வாக்குவாதம் செய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் செல்விக்கு காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த போலீஸார், வழக்கறிஞர்கள் அரிகிருஷ்ணனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் ஆய்வாளர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து அரிகிருஷ்ணனை கைது செய்தார்.

தொடர்புடைய செய்தி