செம்மங்குடியில் ரூ. 13. 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம்

3பார்த்தது
செம்மங்குடியில் ரூ. 13. 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட செம்மங்குடி கிராமத்தில் ரூ. 13.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பொது விநியோக கட்டிடத்தையும், அதம்பார் ஊராட்சி ஸோத்திரியம் பகுதியில் ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பகுதி நேர பொது விநியோக கட்டிடத்தையும் திறந்து வைத்தார். இந்த கட்டிடங்கள் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கட்டிடங்களைத் திறந்து வைத்த பின்னர், முதல் விற்பனையையும் அவர் தொடங்கி வைத்தார். அதிமுக ஆட்சியில் தான் ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி