தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்கள், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் 10,000 முகாம்களின் அடிப்படையில் நலத்திட்ட பயன்கள் மற்றும் இளைஞர்களின் கனவுகளைப் பதிவு செய்யும் 'என் கனவு என் எதிர்காலம்' இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் 126 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4406 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியத் தொகைக்கான ஆணையையும் வழங்கினார்.