மத்திய பட்ஜெட்டை கண்டித்து மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார்குடி நகர செயலாளர் தாயுமானவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் கோரிக்கைகள், விவசாயிகளின் நலன், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்றும், மாநிலங்களுக்கு வரி பகிர்வு குறைக்கப்பட்டுள்ளது என்றும், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, உரம் மானியம் போன்றவற்றுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர். கண்டன கோஷங்களை எழுப்பிய இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி