வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜமாலியா தெருவில் அரசுக்கு சொந்தமான வடிகால் வாய்க்கால் பாதையை தனிநபர்கள் ஆக்கிரமித்து நெடுஞ்சுவர் எழுப்பியிருந்தனர். இதனால் மழைநீர் வடியாமல் தேங்கி, நோய் தொற்று அபாயம் ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று, நகராட்சி ஆணையர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற தலைவரின் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தேங்கிய மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற்றப்பட்டது.