திருவாரூர்: தகுதி தோ்வில் மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்த ஆசிரியர்

248பார்த்தது
திருவாரூர்: தகுதி தோ்வில் மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்த ஆசிரியர்
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித்தேர்வில், எடகீழையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் தமிழரசன், தாள் 1-இல் 150-க்கு 128 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்தார். தாள் 2-இல் 105 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இவர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நீடாமங்கலம் வட்டார செயலாளராக உள்ளார். இவரை வட்டார கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் இயக்க பொறுப்பாளர்கள் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி