கனரக லாரிகளுக்கான தகுதி சான்று புதுப்பிப்பு கட்டணத்தை ரூ. 8,500-லிருந்து ரூ. 28,500 ஆக மத்திய அரசு உயர்த்தியதை திரும்பப் பெற வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன், வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க அலுவலகத்திலிருந்து வந்தபோது, 15 நிமிடங்கள் வாயிலில் காத்திருந்து லாரி உரிமையாளர்களிடமிருந்து மனுவைப் பெற்றுக்கொண்டார்.