திருத்தங்கூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

0பார்த்தது
திருத்தங்கூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
திருத்துறைப்பூண்டி அருகே திருத்தங்கூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் பரிகார தெய்வங்களுக்கு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தீமிதி திருவிழா தொடங்கியது. ஒரு வார காலம் அம்மன் வீதி உலா காட்சி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முக்கிய திருவிழாவான தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. ஆலயம் எதிரே வளர்க்கப்பட்ட தீக்குண்டத்தில் பக்தர்கள் பால்குடங்களுடனும் கை குழந்தைகளுடனும் தீயில் இறங்கி தங்கள் வேண்டுதலை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர். இந்த நிகழ்வில் கோவில் நிர்வாகிகள், கிராமவாசிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு திரவுபதி அம்மன் ஆலய வைகாசி பெருந்திர விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.