திருவாரூர்: குட்கா கடத்தி வந்த 3 பேர் கைது

0பார்த்தது
திருவாரூர்: குட்கா கடத்தி வந்த 3 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் தனிப்படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, கும்பகோணத்திலிருந்து திருவாரூர் நோக்கி வந்த காரை சோதனை செய்தனர். காரில் பெங்களூருவிலிருந்து 365 கிலோ குட்காவை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரகுமார் (24), மங்கனராம் (20), குட்கா கடத்தல் வழக்கில் தொடர்புடைய அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த அஸ்ரப்அலி (60) ஆகிய மூவரையும் திருவாரூர் தாலுகா போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 365 கிலோ குட்கா, 2 கார்கள், 3 கைப்பேசிகள், ரூ. 20,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி