திருவாரூர்: 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறை

387பார்த்தது
திருவாரூர்:  4 பேர் குண்டர் சட்டத்தில் சிறை
திருவாரூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பொது அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் ஆயுதங்களை வைத்து மிரட்டியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பெருகவாழ்ந்தான் பகுதியில் மதுபானம் காய்ச்சி விற்ற ரா. பாலமுருகன், பி. பெலிக்ஸ்ராஜா, மன்னார்குடியில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் ஆயுதங்களுடன் மிரட்டிய நா. திருமேனி என்ற ராஜ்குமார், திருத்துறைப்பூண்டி பகுதியில் கஞ்சா விற்ற ப. மணிகண்டன் என்ற புறா மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 4 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி