நன்னிலம் அருகே முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ்(22) என்ற வாலிபர், 3 மாதங்களுக்கு முன்பு தெரு நாய் கடித்ததை அலட்சியப்படுத்தியதால் ரேபிஸ் நோய் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசி போட்டுக் கொண்டாலும், முறையான சிகிச்சை பெறாததால் நாய் போல் கத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அவரது உடலை சுகாதாரத்துறையினர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் அடக்கம் செய்தனர்.